சனி, 28 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (18:15 IST)

தடுப்பூசி போடனுமா? பட்டங்களே வேண்டாம் - ஜோகோவிட்ச் பேட்டி!

பிரெஞ்சு ஓபன்‌ மற்றும்‌ விம்பிள்டன் பட்டங்களை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளேன் என ஜோகோவிட்ச் பேட்டி. 

 
டென்னிஸ் விளையாட்டு உலகின் ஜாம்பவான்களில் ஒருவர் செர்பிய நாட்டை சேர்ந்த ஜோகோவிச். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அவரை அண்மையில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்று விளையாட ஆஸ்திரேலிய நாட்டு அரசு அனுமதிக்கவில்லை. 
 
இதனிடையே ஜோகோவிட்ச் இது குறித்து தெரிவித்ததாவது, கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை விட எனது வருங்கால கோப்பைகளை நான் இழக்க தயாராக உள்ளேன். தடுப்பூசிக்கு எதிராக நான் இல்லை. எனது உடம்புக்குள் என்ன செலுத்த வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கான சுதந்திரத்தை மட்டுமே நான் பயன்படுத்திக் கொள்கிறேன். 
 
நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. எனக்கும் அது சார்ந்த எந்தவொரு இயக்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் தனியொரு மனிதனுக்கு எது தேவை, தேவையில்லை என்பதை தெரிவு செய்வதற்கான உரிமை உள்ளது என குறிப்பிட்டார். 
 
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் எந்த நாட்டிலும் இருக்கலாம் என்ற உரிமையை பெற்ற நோவாக் ஜோகோவிட்ச் வைத்திருந்த ஆஸ்திரேலிய விசாவை அந்நாட்டின் குடிவரவு அமைச்சகம் சில வாரங்களுக்கு முன்பு ரத்து செய்தது. இதனால் அவரால் ஆஸ்திரேலிய ஓபனில் விளையாட முடியாமல் போனது.