கொரோனா எதிரொலி… டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து வெளியேறிய வடகொரியா!

Last Updated: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (16:05 IST)

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க உள்ள ஒலிம்பிக் தொடரில் இருந்து வடகொரியா வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளன. ஜப்பானில் இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் போட்டிகளைப் பார்ப்பதற்கு வெளிநாட்டு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இப்போது அந்த தொடரில் இருந்து விலகுவதாக வடகொரியா அறிவித்துள்ளது. கொரோனா பரவல் அச்சமே இதற்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இதற்கு முன்னர் 1988 ஆம் ஆண்டு தென்கொரியாவில் ஒலிம்பிக் நடந்தபோது அதை புறக்கணித்தது வடகொரியா.
இதில் மேலும் படிக்கவும் :