வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (16:04 IST)

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை மிரட்டினரா அதிமுக தொண்டர்கள்!

திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியை வாக்குச்சாவடியை விட்டு வெளியே வரமுடியாத அளவுக்கு அதிமுகவினர் மிரட்டி முடக்கியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

கோவை கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து திமுக சார்பில் கார்த்திகேயெ சிவசேனாபதி போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று வாக்குப்பதிவை அடுத்து செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று பார்வையிட்ட போது அவரை அதிமுகவினர் சூழ்ந்து மிரட்டியதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். அவர் காரில் ஏறி செல்ல முற்பட்ட போதும் காரை செல்ல விடாமல் தடுத்துள்ளனர்.