47 போட்டிகள் முடிந்தும் அடுத்த சுற்றுக்கு உறுதியாகாத அணிகள்: ஐபிஎல் புள்ளிகள் விபரங்கள்

ipl
47 போட்டிகள் முடிந்தும் அடுத்த சுற்றுக்கு உறுதியாகாத அணிகள்
siva| Last Updated: புதன், 28 அக்டோபர் 2020 (07:55 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளன. இதுவரை 47 லீக் போட்டிகள் நடைபெற்று உள்ளன என்பதும் இன்னும் ஒன்பது போட்டிகள் மட்டுமே மீதம் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆனால் 47 போட்டிகள் நடைபெற்று முடிந்த போதிலும் இன்னும் ஒரு அணி அடுத்த சுற்றுக்கு உறுதியாக தகுதி பெற்றதாகத் தெரியவில்லை, மும்பை, டெல்லி மற்றும் பெங்களூரு ஆகிய மூன்று அணிகள் 14 புள்ளிகள் பெற்று இருந்தாலும் அடுத்து வரும் போட்டிகளின் முடிவை பொறுத்தே இந்த அணிகள் அடுத்த பிளே ஆப் சுற்றுக்கு செல்வது உறுதி செய்யப்படும்
குறிப்பாக மும்பை மற்றும் பெங்களூர் அணிகள் இன்று மோதவுள்ளன. இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, பிளே ஆப் சுற்றுக்கு உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தோல்வி அடையும் அணி மற்றும் பஞ்சாப், கொல்கத்தா,ஐதராபாத், ராஜஸ்தான், டெல்லி ஆகிய அணிகளில் மூன்று அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும்

தற்போது மும்பை, பெங்களூர், டெல்லி அணிகள் தலா 14 புள்ளிகளையும், பஞ்சாப், கொல்கத்தா ஆகிய இரண்டு அணிகளும் தலா 12 புள்ளிகளையும், ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் தலா 10 புள்ளிகள் பெற்று உள்ளன
எனவே மொத்தமுள்ள 7 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் தவிர மற்ற ஏழு அணிகளுக்கும் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு இருப்பதால் அடுத்துவரும் அனைத்து போட்டிகளும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :