வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: இந்தியாவுக்கு மிக எளிய இலக்கு!
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே தற்போது 2வது கிரிக்கெட் டெஸ்ட் நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா பெறுவதற்கு வெறும் 145 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22ஆம் தேதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 227 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 231 ரன்களும் எடுத்தன.
இதனை அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சில் 314 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த அணி வெற்றி பெற 145 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் சற்று முன் வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ள நிலையில் இன்னும் 116 ரன்கள் தேவை என்ற நிலையில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran