ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்- கமல்ஹாசன்
மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல்காந்தி தன் கட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டி, இந்தியா முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரையை நடத்தி வருகிறார்.
கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாக்குமரியில் தனது யாத்திரையை தொடங்கிய அவர் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் என பல மாநிலங்களை தாண்டி வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.
அவர் பயணத்திற்கு பல மா நிலங்களைச் சேர்ந்த மக்களும் ஆதரவு தெரிவித்து அவருடன் சேர்ந்து நடந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இதுவரை 100 நாட்களைக் கடந்துள்ள இந்த யாத்திரை இன்று டெல்லியில் நடந்து வருகிறது.
இந்த யாத்திரையில் நடிகரும் ம. நீ, மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தான் கட்சி நிர்வாகிகளுடன் ராகுல் காந்தியுடன் இணைந்துள்ளார்.
இதுகுறித்து அவர் தன் டுவிட்டரில், இந்தியாவின் பன்மைத்துவத்தைப் பாதுகாக்க அன்புச் சகோதரர் @RahulGandhi முன்னெடுக்கும் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையில் நானும், @maiamofficial நிர்வாகிகளும் கலந்துகொள்கிறோம். மண் மொழி மக்கள் காக்க ஓர் இந்தியக் குடிமகனாக என் பங்களிப்பு எப்போதும் இருக்கும்.ஜெய் ஹிந்த்! என்று பதிவிட்டுள்ளார்.
Edited By Sinoj