1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 11 நவம்பர் 2020 (07:40 IST)

பர்ப்பிள் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை, ஆனாலும் சாம்பியன் ஆனது மும்பை!

பர்ப்பிள் கேப் இல்லை, ஆரஞ்சு கேப் இல்லை,
2020 ஆம் ஆண்டில் ஐபிஎல் சாம்பியன் ஆக நேற்று மும்பை அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே 
 
டெல்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் வழங்கப்படும் பெருமைக்குரிய கேப் கூறப்படும் பர்ப்பிள் கேப் மற்றும் ஆரஞ்சு கேப் ஆகிய இரண்டுமே மும்பை அணிக்கு கிடைக்கவில்லை. இருப்பினும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் பர்ப்பிள் கேப் கே.எல்.ராகுலுக்கும், ஆரஞ்சு கேப் ரபடாவுக்கும் வழங்கப்பட்டது 
 
இந்த வெற்றியை அடுத்து மும்பை அணியின் பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறிய போது எங்களுக்கு பர்ப்பிள் கேப் அல்லது ஆரஞ்சு கேப் தேவையில்லை. எங்களுடைய நோக்கம் சாம்பியன் மட்டுமே. அதை நாங்கள் பெற்றுவிட்டோம். அதுவே எங்களுக்குப் போதும் என்று கூறியுள்ளார் 
 
சாம்பியன் பட்டம் பெறும் அணி பர்ப்பிள் கேப்  மற்றும் ஆரஞ்சுப் கேப் இல்லாமலேயே வெற்றி பெற்றுள்ளது அந்த அணியின் ஒட்டுமொத்த முயற்சியை காட்டுகிறது