செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated: சனி, 26 நவம்பர் 2022 (09:05 IST)

பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவு… காயத்தால் லீக் போட்டிகளில் இருந்து நெய்மார் விலகல்!

செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் பிரேசில் அணியின் கேப்டனும் நட்சத்திர வீரருமான நெய்மர்  79 வது  நிமிடத்தில் எதிரணி வீரர் அவரிடமிருந்து பந்தைப் பறிக்க முயன்றபோது, கீழே விழுந்தார். காலில் அடிபட்டுள்ள அவரை மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றனர். இதனால், அடுத்த போட்டியில் அவர் விளையாடுவாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. நாளை இதுகுறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகிற்து.

இந்நிலையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அடுத்து 2 லீக் போட்டிகளில் விளையாட மாட்டார் என பிபா அமைப்பு வெளியிட்டுள்ளது. இது பிரேசி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.