வியாழன், 20 மார்ச் 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 8 நவம்பர் 2022 (19:43 IST)

ரோஹித் ஷர்மாவின் காயம் பற்றி வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!

இந்திய அணி அரையிறுதி போட்டிக்காக தயாராகி வரும் நிலையில அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, காயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வலைப் பயிற்சியில் ஈடுபட்ட போது அவர் காயம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் நாளை மறுநாள் நடக்கும் போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னதாக இந்த தொடர் முழுவதும் ரோஹித் ஷர்மா பேட்டிங்கில் சொதப்பி வருகிறார். இந்நிலையில் இன்றைக்கு வெளியாகியுள்ள தகவலின் படி ரோஹித் ஷர்மா சீரான உடல்நிலையில் உள்ளதாகவும், அவர் இன்று வலைப் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் அரையிறுதி போட்டியில் ரோஹித் ஷர்மா விளையாடுவது உறுதியாகியுள்ளது.