திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (21:21 IST)

14 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: நியூசிலாந்தை திணறடிக்கும் இந்திய பவுலர்கள்..!

arshdeep
14 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: நியூசிலாந்தை திணறடிக்கும் இந்திய பவுலர்கள்..!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி டி20 கிரிக்கெட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி சுப்மன் கில் அடித்த அபார சதம் காரணமாக 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் 235 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் நியூசிலாந்து அணி மூன்று ஓவர்களில் நான்கு விக்கெட் இழந்து வெறும் 14 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 
 
இதனை அடுத்து இந்திய அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான அலென், கான்வே, மார்க் மற்றும் பிலிப்ஸ் ஆகிய 4 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க எண்களில் தங்கள் விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva