செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 1 பிப்ரவரி 2023 (15:22 IST)

விக்கெட் எடுத்ததும் ஓவர் அலப்பறை… சாம் கர்ரணுக்கு குட்டு வைத்த ஐசிசி!

பிப்ரவரி 1 புதன்கிழமை கிம்பர்லியில் உள்ள டயமண்ட் ஓவல் மைதானத்தில் மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் சர்வதேச (ODI) தொடரில் இங்கிலாந்து தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் சர்ச்சைக்கு உரிய விதத்தில் நடந்துகொண்ட ஆல்-ரவுண்டர் சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

ஜனவரி 29, ஞாயிற்றுக்கிழமை நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டெம்பா பவுமாவின் விக்கெட்டை எடுத்த பிறகு "அதிகப்படியான கொண்டாட்டத்துக்காக " ஒரு குறைபாடு புள்ளியை வழங்கினார். மேலும் போட்டியின் சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப் பட்டுள்ளது.