திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (18:47 IST)

3வது டி20 போட்டி.. டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு

india
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே இன்று மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஏற்கனவே நடந்த இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி தொடரை வெல்லும் மணி என்பதால் இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றி பெற தீவிரமாக முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. இதனை அடுத்து இன்னும் ஒரு சில நிமிடங்களில் இந்திய அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்றைய போட்டியில் இந்திய அணியில் உம்ரான் மாலிக், சாஹலுக்கு பதில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran