செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (19:38 IST)

டாஸ் வென்ற பாகிஸ்தான்: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்!

டாஸ் வென்ற பாகிஸ்தான்: நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்!
உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன் டாஸ் போடப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததை அடுத்து நியூசிலாந்து அணி தற்போது பேட்டிங் செய்ய களம் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாகிஸ்தான் வீசிய முதல் ஓவரில் நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒரு ரன்னை கூட எடுக்கவில்லை என்பதால் அந்த ஓவர் மெய்டன் ஓவராகியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே இந்திய அணியை வீழ்த்தியுள்ள பாகிஸ்தான் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்கி இருக்கும் நிலையில் இன்று நியூஸிலாந்தையும் வீழ்த்த அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சார்ஜா மைதானம் பாகிஸ்தானுக்கு ஆடியன்ஸ்களின் ஆதரவு கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.