செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (17:08 IST)

நியூசிலாந்து ஆல்ரவுண்டருக்கு காயம்.. சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிர்ச்சி..!

jamisen
நியூசிலாந்து ஆல்ரவுண்டருக்கு காயம்.. சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிர்ச்சி..!
நியூசிலாந்து அணி ஆல்ரவுண்டருக்கு திடீரென காயம் ஏற்பட்டதை அடுத்து அவரை ஒரு கோடி கொடுத்து ஏலம் எடுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 
 
நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல்ரவுண்டர் ஜேமிசன் விலகியுள்ளார். அவருடைய காயம் குறித்து மருத்துவர்கள் தெரிவித்த போது இன்னும் சில மாதங்களுக்கு அவர் கிரிக்கெட் விளையாட முடியாது என்றும் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. 
 
இந்த நிலையில் ஜேமிசன் சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் அவரை ஒரு கோடி கொடுத்து ஏலம் எடுத்த சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இருப்பினும் ஐபிஎல் தொடங்குவதற்கு முன் அவர் முழு குணம் ஆகி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவரது தரப்பினர் கூறுகின்றனர்.
 
Edited by Mahendran