1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:03 IST)

இன்னும் நாடு திருந்தாவிட்டால் இலக்கியம் ஏதுக்கு? வைரமுத்து

மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல் தலைவர்கள் முதல் கவிஞர்கள் வரை அனைவரும் பாரதியின் பிறந்த நாளுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் பாரதி பிறந்தநாள் குறித்து தனது ஆவேசமான கருத்துக்களை கவிதை வடிவில் வழங்கியுள்ளார். வள்ளுவனும் பாரதியும் முழங்கிய இந்த ஊரில் இன்னும் திருந்தாவிட்டால் இலக்கியம் எதற்கு என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார் 
 
கவிப்பேரரசு வைரமுத்து தனது டுவிட்டரில் கூறிய பாரதி வாழ்த்து கவிதை இதுதான்:
 
 
பிறப்பொக்கும் 
எல்லா உயிர்க்கும்’ - வள்ளுவன்
 
‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ - பாரதி
 
‘உழுதுண்டு வாழ்வாரே 
வாழ்வார்’ - வள்ளுவன்
 
‘உழவுக்கும் தொழிலுக்கும் 
வந்தனை செய்வோம்’ - பாரதி
 
முன்னே வள்ளுவன் பின்னே பாரதி
முழங்கினர் ஊருக்கு - அட
இன்னும் நாடு திருந்தாவிட்டால்
இலக்கியம் ஏதுக்கு