திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:44 IST)

இமாலய இலக்கை 15 ஓவரில் துரத்திய நியுசிலாந்து – வெளுத்து வாங்கிய பேட்ஸ்மேன்கள்!

நியுசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி நியுசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

நியூசிலாந்து நாட்டுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வளையாடி வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 180 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் பொல்லார்டு அதிரடியாக 37 பந்தில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார்.

இதையடுத்து களமிறங்கிய நியுசிலாந்து வீரர்களும் அதிரடியில் ஈடுபட்டனர். இதனால் அந்த அணி 15.2 ஓவர்களுல் 179 ரன்கள் சேர்க்க , மழைக் குறுக்கிட்டதால் நியுசிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.