1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 27 நவம்பர் 2020 (21:25 IST)

படத்தை முடிக்காமல் பாண்டிச்சேரியை விட்டு வரமாட்டோம் – மாநாடு படக்குழு எடுத்த முடிவு!

நிவர் புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டாலும் மாநாடு படக்குழு பாண்டிச்சேரியிலேயே தங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

நடிகர் சிம்பு கொரோனா லாக்டவுனுக்கு முன்னர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். ஆனால் கொரோனா பாதிப்புக்குப் பின் அவர சுசீந்தரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துவிட்டு இப்போது மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். தற்போது பாண்டிச்சேரியில் அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இரு தினங்களுக்கு முன்னர் வீசிய நிவர் புயலால் பாண்டிச்சேரி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால் அங்கு நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. ஆனால் சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் சென்னை செல்லாமல் அங்கேயே தங்கி உள்ளனர். இயல்பு நிலை திரும்பியதும் மீண்டும் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டுதான் அங்கிருந்து வர உள்ளனராம்.