செவ்வாய், 18 ஜூன் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (12:42 IST)

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 4 ஆண்டுகளுக்கு ஒப்பதம்!

mc donald
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்: 4 ஆண்டுகளுக்கு ஒப்பதம்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் நான்கு ஆண்டுகளுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
ஆஸ்திரேலிய அணி கடந்த சில நாட்களாக வெற்றிகளை குவித்து வரும் நிலையில் அந்த அணியின் பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் மெக் டொனால்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார் 
 
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய முழுநேர தலைமை பயிற்சியாளராகவும், அணியின் தேர்வாளராகவும் ஆல்ரவுண்டர் மெக் டொனால்டு நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது 
 
டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய மூன்றுவித கிரிக்கெட் போட்டிகளுக்கும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அவர் பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.