ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (12:49 IST)

மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டத்தை நெருங்கியது ஆஸ்திரேலியா!

மகளிர் உலகக்கோப்பை: சாம்பியன் பட்டத்தை நெருங்கியது ஆஸ்திரேலியா!
உலக கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 
 
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 356 ரன்கள் எடுத்துள்ளது.
 
இந்த நிலையில் 357 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி தற்போது விளையாடி வருகிறது. அந்த அணி 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது
 
இன்னும் வெற்றிபெற 16.3 ஓவர்களில் 144 ரன்கள் எடுக்க வேண்டியது உள்ளது என்பதும் கைவசம் 3 விக்கெட்டுகளை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆஸ்திரேலிய அணி உலக கோப்பையை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது