திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (14:04 IST)

இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம்! – ஆஸ்திரேலிய மகளிர் அணி சாதனை!

நியூஸிலாந்தில் நடைபெற்ற பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

உலகக்கோப்பை பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடங்கி நடந்து வந்த நிலையில் இன்றைய இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தது.

இரண்டாவதாக இங்கிலாந்து களம் இறங்கிய நிலையில் 43 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 285 ரன்கள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தது. இதனால் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா தற்போது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.