வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (07:35 IST)

சிட்னியை சுற்றிப்பார்க்கும் நடராஜன்: வைரலாகும் புகைப்படம்!

சிட்னியை சுற்றிப்பார்க்கும் நடராஜன்: வைரலாகும் புகைப்படம்!
தமிழ்நாட்டின், சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்த நடராஜன் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டதால் அனைத்து தமிழர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்கிறார் 
 
ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றும் அதன் பின் டி20 போட்டியில் கலக்கிய நடராஜனுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்களை ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது சிட்னியை சுற்றிப் பார்த்து வருவதாக நடராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்
 
மேலும் சிட்னியில் உள்ள முக்கிய பகுதிகளில் அவர் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் நடராஜன் தனது டுவிட்டர் பக்கங்களில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  சேலத்திலிருந்து சென்ற ஒரு இளைஞர் இந்திய அணியில் சாதித்து உள்ளது அனைவருக்கும் பெருமை உடையதாக உள்ளது  
 
மேலும் இந்திய அணியின் நடராஜன் நிரந்தர இடம் பிடித்துவிட்டதாகவும், அவர் தோனி போல் ஒருநாள் இந்திய அணிக்கு கேப்டனாகவும் வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது