திங்கள், 12 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2020 (17:12 IST)

மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி செய்த தவறு – ஐசிசி அபராதம்!

மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய அணி செய்த தவறு – ஐசிசி அபராதம்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு நீண்ட கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரில் ஆஸியும் டி 20 தொடரில் இந்தியாவும் 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளன. கடைசி டி 20 போட்டியில் இந்திய அணி தாமதமாக பந்து வீசியதால் வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரில் இதுபோல அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.