வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 16 ஜனவரி 2021 (21:35 IST)

நடராஜன் ஒரு பிரகாசமான வாய்ப்பு: ரோகித் சர்மா பாராட்டு!

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் நெட்பிளேயராகத்தான் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாக சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக ஒரு நாள் போட்டியில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது
 
அதன்பின் அவர் டி20 போட்டியிலும் விளையாடினார். இந்த இரண்டு வகை போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுக்களை வீழ்த்தியதால் தற்போது அவர் நடந்து கொண்டிருக்கும் 4-வது டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி வருகிறார் என்பதும் 3 விக்கெட்டுகளை அவர் இதுவரை வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடராஜனுக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். நடராஜன் எங்கள் அணிக்கு ஒரு பிரகாசமான வாய்ப்பு என்றும் இந்த டெஸ்டின் தொடக்கத்தில் துல்லியமாக பந்துவீசினார் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கிய நடராஜனுக்கு துணை கேப்டன் ரோகித் சர்மா பாராட்டு தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது