செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:26 IST)

நான்காவது டெஸ்ட்டில் வலுவான நிலையில் ஆஸி - திணறும் இந்திய பவுலர்கள்!

பிரிஸ்பேனில் தொடங்கி நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ் திரேலியா 166 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்துள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஒற்றை இலக்க எண்களில் இந்திய பவுலர்கள் அவுட் ஆக்கினர்கள்.

ஆனால் அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட ஆஸி அணி சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியின் மார்னஸ் லபுஷான் சிறப்பாக விளையாடி 82 ரன்கள் சேர்த்துள்ளார். தற்போது வரை ஆஸி 166 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இழந்துள்ளது. விக்கெட்கள் வீழ்த்த முடியாமல் இந்திய பவுலர்கள் தடுமாறி வருகின்றனர். தனது அறிமுகப் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் முதல் விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜனுக்கு விக்கெட்கள் கிடைக்கவில்லை.