அடுத்தடுத்து ஆஸி. விக்கெட்டுகளை சரிக்கும் நடராஜன்!!
இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் காபா மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்று 4-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் தொடங்கி உள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு எடுத்தது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் ஒற்றை இலக்க எண்களில் இந்திய பவுலர்கள் அவுட் ஆக்கினர்கள்.
ஆனால் அதன் பிறகு சுதாரித்துக் கொண்ட ஆஸி அணி சிறப்பாக பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ள நடராஜன் தனது 64 வது ஓவரில் மேத்யூ வேடை 45 ரன்களில் அவுட் செய்தார். அடுத்த ஓவரிலேயே சதம் கடந்து விளையாடிக் கொண்டிருந்த லபுஷேனையும் நடராஜன் அவுட் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.