இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நடால்....இம்முறை கோப்பை வெல்வாரா ?

tennis
Last Updated: சனி, 7 செப்டம்பர் 2019 (19:55 IST)
டென்னிஸ் விளையாட்டில் நிகழ்காலத்தில் மூன்று ஜாம்பாவான்களே அதிக கோப்பைகளை அடிக்கடி வெல்வர். முதலில் பெடரர். அடுத்து ரபேல் நடால். அதற்கடுத்து ஜோகோவிச். இந்த மூன்று காளையர்களின் வேகத்துக்கு மற்றவர்கள் தாக்குப்பிடிப்பது கடினம்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வருகின்ற, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில், மூத்த வீரரான பெடரர் தோல்வியை தழுவி அதிர்ச்சி கொடுத்தார்.
 
அவரது சக போட்டியாளரவே  ரபேல் நடாலைப் எப்போதும் பார்த்து பழகிய ரசிகர்ளுக்கு இம்முறை இருவரும் இறுதிபோட்டியில் கலந்து கொள்ளாதது சற்று ஏமாற்றமாகவே இருக்கும்.
 
இந்நிலையில் உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள ரஃபேல் நடால், அரையிறுதியில் இத்தாலியின் பெர்டினிட்டிக்கு எதிராக விளையாடி , முதல் இரு செட்களில் டைப்பிரெக்கிலும், மற்ற இரு செட்களை 6-4 , 6-1 என்ற கணக்கில் அவரை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
 
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிபோட்டியில் நடால், டேனில் மெல்வேடேவ்வை எதிர்கொள்கிறார். 


இதில் மேலும் படிக்கவும் :