திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:05 IST)

இரண்டாவது இன்னிங்ஸுக்கு தயார் – 26 கிலோ எடைக் குறைத்த சானியா மிர்சா !

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வில் இருந்த சானியா மிர்ஸா மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் விளையாட தயாராகியுள்ளார்.

இந்தியாவின் முன்னனி டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரார் சோயிப் மாலிக்கை திருமணம் செய்துகொண்டு குழந்தை பிறந்ததை அடுத்து சிலகாலம் டென்னிஸ் விளையாடாமல் இருந்து வந்தார். இந்நிலையில் 32 வயதாகும் சானியா மிர்சா இப்போது மீண்டும் டென்னிஸ் விளையாட தயாராகியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது :-

நான் டென்னிஸில் அடைய நினைத்த சாதனைகளை நிகழ்த்தி விட்டேன். இனிமேல் கிடைப்பதெல்லாம் போனஸ்தான். ஜனவரியில் மீண்டும் சர்வதேச டென்னிஸுக்கு வருவேன். யாருக்கும் எதையும் நிரூபிக்க மீண்டும்வரவில்லை. திரும்பி வருவதற்கான ஒரே காரணம், நான் விளையாடுவதையும் போட்டியிடுவதையும் விரும்புகிறேன். செரீனா வில்லியம்ஸன் போன்றவர்கள் குழந்தை பிறந்தபின்னும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. என் உடல் எப்படி பயிற்சிக்கு வினையாற்றுகிறது என்பதை கவனித்து வருகிறேன். இன்னும் இரண்டு மாதங்களில் நல்ல நிலைக்கு வந்துவிடுவேன்.