வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (09:06 IST)

உலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல் – ஜப்பான் பெண் முதலிடம்

உலக அளவில் சிறப்பாக விளையாடும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச டேனிஸ் சங்கம் சிறப்பாக விளையாடும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6,417 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி 6,256 புள்ளிகள் பெற்று உள்ளார். சென்ற வருட தரவரிசையில் ஆஷ்லிதான் முதலிடத்தில் இருந்தார். ஒரே வருடத்தில் அவரது சாதனையை முறியடித்துள்ளார் நவோமி.