புதன், 11 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (14:46 IST)

நேத்து ஸ்ட்ரெச்சரில்… இன்று ஃப்ளைட்டில்… சி எஸ் கே அணியோடு இணையவுள்ள வங்கதேச வீரர்!

ஐபிஎல் 2024 சீசன் தொடங்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் சி எஸ் கே அணி வீரர்கள் பெரும்பாலானவர்கள் சென்னை வந்து பயிற்சியை தொடங்கினர். தோனி பத்து நாட்களுக்கு முன்பாகவே சென்னை வந்து சேர்ந்தார்.

சென்னை அணியில் டெவென் கான்வே மற்றும் மதீஷா பதிரனா ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதே போல வங்கதேச வீரரான முஸ்தாஃபிசூர் ரஹ்மான் சமீபத்தில் நடந்த போட்டி ஒன்றில் காயமடைந்தார். அவரை மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் கொண்டு சென்றனர்.

இதனால் அவரும் இந்த சீசனில் விளையாட மாட்டார் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் சென்னை அணியோடு இணைய விமான நிலையத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனால் அவர் சிஎஸ் கே அணியில் இணைவது உறுதியாகியுள்ளது.