வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 19 மார்ச் 2024 (14:34 IST)

கே கே ஆர் அணியை நான் வெற்றிகரமான அணியாக மாற்றவில்லை… கம்பீர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இப்போது பாஜக எம்பியாக இருக்கிறார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணி பற்றியும் கிரிக்கெட் பற்றியும் விமர்சனங்களை வைத்து வருகிறார். துணிச்சலாக பலரைப் பற்றியும் தன் கருத்துகளை வெளிப்படுத்தி வருபவர்.

இந்நிலையில் இப்போது தான் கேப்டனாக பங்காற்றிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அவர் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதனால் இப்போது அவர் அரசியல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என பாஜக தேசிய தலைவரிடம் கூறியுள்ளார். இதனால் அவர் மீண்டும் தேர்தலில் பங்கேற்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடனான உறவு குறித்து பேசியுள்ளார். அதில் “நான் கே கே ஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றவில்லை. கே கே ஆர் அணிதான் என்னை வெற்றிகரமான கேப்டனாக்கியது” எனக் கூறியுள்ளார். கம்பீர் தலைமையில் கே கே ஆர் அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.