ஒரு தோனிதான் இருந்தார்… இருப்பார்… கவாஸ்கரின் ஒப்பீடு குறித்து ஜுரெல் கருத்து!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில். சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் ஆட்டநாயகன் விருதை வென்றார். துருவ்வின் இன்னிங்ஸ் குறித்து ஒரு உரையாடலின் போது பேசிய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “துருவ்வின் இந்த நிதானமான இன்னிங்ஸை பார்க்கும்போது அவரை அடுத்த எம் எஸ் தோனியாகவே நான் பார்க்கிறேன்” எனக் கூறியிருந்தார்.
சில போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஒரு வீரரை தோனியோடு ஒப்பிடுவதா என விமர்சனங்கள் எழுந்தன. அதன் பின்னர் கவாஸ்கர் தன்னுடைய ஒப்பீட்டுக்கு விளக்கமளித்தார். இந்நிலையில் கவாஸ்கர், தன்னை தோனியோடு ஒப்பிட்டது குறித்து துருவ் ஜுரெல் பேசியுள்ளார்.
அதில் “என்னை தோனியோடு ஒப்பிட்டதற்கு நன்றி கவாஸ்கர் சார். ஆனால் நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். தோனி செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது. இங்கு ஒரே ஒரு தோனிதான் இருந்தார்; இருப்பார். நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.