1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 9 மே 2018 (23:37 IST)

மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா படுதோல்வி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரின் 41வது போட்டியான மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணியிடம் கொல்கத்தா அணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த  வெற்றியின் மூலம் மும்பை அணி, கொல்கத்தாவை பின்னுக்கு தள்ளிவிட்டு 4வது இடத்தை பிடித்துள்ளது. இதனால் இந்த அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசமாக்கி கொண்டுள்ளது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 210 ரன்கள் குவித்தது. இதனால் 211 என்ற இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணி 18.1 ஓவர்களில்  அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 108 ரன்கள் எடுத்து 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
 
மும்பை அணியின் கே.எச்.பாண்டியா, மற்றும் எச்.எச். பாண்டியா ஆகிய இருவரும் தலா இரண்டு விக்கெட்டுக்களாஇயும், மெல்கிலங்கன், பும்ரா, மார்கண்டே, மற்றும் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.