பஞ்சாபை வென்றது ராஜஸ்தான்:

Last Modified புதன், 9 மே 2018 (06:00 IST)
நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40வது போட்டியில் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ரன்கள் எடுத்தது.

159 ரன்கள் என்ற சுமாரான இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியினர்களின் அபாரமான பந்துவீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராஜஸ்த்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் ராகுல் அபாரமாக விளையாடி 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தபோதிலும் அந்த அணி தோல்வி அடைந்தது பரிதாபத்திற்குரியது ஆகும்
இந்த வெற்றியால் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது, தோல்வி அடைந்த பஞ்சாப் அணி 12 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது.இதில் மேலும் படிக்கவும் :