தோனி ஸ்டைலில் சிக்ஸ் அடித்த இஷான் கிஷான்

Ishan Kishan
Last Updated: புதன், 9 மே 2018 (21:24 IST)
கொல்கத்தா அணியுடனான போட்டியில் முதல் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியின் வீரர் இஷான் கிஷான் தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து அசத்தினார்.

 
தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன். இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கியது.
 
ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்கள் லிவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் அவுட்டாக பின்னர் களமிறங்கிய இஷான் கிஷான் மற்றும் ரோகித் சர்மா கூட்டணி அடித்து நொறுக்கியது.
 
இஷான் கிஷான் சிக்ஸராக பறக்கவிட்டு அசத்தினார். 21 பந்துகளில் 62 ரன்கள் குவித்து வெளியேறினார். இவர் மொத்தம் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். அதில் ஒரு சிக்ஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஸ்டைலில் அடித்து அசத்தினார்.


இதில் மேலும் படிக்கவும் :