திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 ஏப்ரல் 2023 (07:18 IST)

20வது ஓவரில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி.. புள்ளிப்பட்டியலில் இணைந்த மும்பை..!

நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் 20-வது ஓவரின் கடைசி பந்தில் மும்பை இரண்டு ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது. 
 
நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 172 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அக்சர்பட்டேல் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் அரைசதம் அடித்திருந்தனர் 
 
இந்த நிலையில் 173 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 65 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தார். இதனை அடுத்து திலக்வர்மா மற்றும் இஷான் கிஷான் நன்றாக விளையாடின்பர். வழக்கம் போல் சூரியகுமார் யாதவ் முதல் பந்தில் அவுட் ஆன நிலையில் கடைசி ஓவரில் மும்பை அணி ஐந்து ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் 5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது 
 
இதனை அடுத்து மும்பை அணி முதல் முதலாக புள்ளி பட்டியல் இணைந்துள்ளது என்பதும் டெல்லி அணி இன்னும் ஒரு வெற்றியை கூட பெறாமல் 0 புள்ளியில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva