ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (14:06 IST)

கள்ளச்சந்தையில் சென்னை ஐபிஎல் டிக்கெட்டுக்கள். ரசிகர்கள் புகார்..!

ஐபிஎல் டிக்கெட்டுகள் கள்ளச் சந்தையில் மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக ரசிகர்கள் புகார் அளித்துள்ளனர் 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை பெறுவதற்காக முந்தைய நாள் இரவு முதல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். 
 
ஆனால் டிக்கெட்டுகளை கார்ப்பரேட் நிறுவனங்கள், ஸ்பான்சர்கள், பிரபலங்கள், அரசு அதிகாரிகள் ஆகியோர்களுக்கு செல்வதாகவும் அதுமட்டுமின்றி 1500 ரூபாய் டிக்கெட் 4000 5000 என கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இரவு முழுவதும் காத்திருந்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே டிக்கெட்டுகளை கொடுத்துவிட்டு டிக்கெட் இல்லை என கூறுவதால் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தையும் ஆன்லைன் மூலமே விற்பனை செய்ய வேண்டும் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva