வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:37 IST)

நடிகர் சல்மான் கானுக்கு கொலைமிரட்டல்....

மும்பையில் உள்ள காவல் கட்டுப்பாடு அறைக்கு போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர். ஏப்ரல் 30 ஆம் தேதி சல்மான்கானை கொன்று விடுவேன் என்று  மிரட்டல் விடுத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான்கான். இவர் தற்போது,  இப்படம்  தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான வீரம் படத்தின் இந்தி ரீமேக்கான கிசி கா கிசி கி பாய்  ஜான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 21 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த நிலையில்,  மகாராஷ்டிர மாநிலம் மும்பை காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு 9 மணியில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஒரு  நபர், தன்னை ராக்கி பாய் என்று அறிமுகம் செய்துகொண்டு, தான் ராஜஸ்தானில் ஜோத்பூர் நகரில் இருந்து பேசுகிறேன் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி நடிகர் சல்மான்கான் கொலை செய்யப்படுவார் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார்,  சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்துள்ள மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.