1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (08:08 IST)

36 ஆண்டுகளின் தவம் - சாதனை படைத்த சாய்னாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வரலாற்றில் 36 ஆண்டுகள் தவத்தின் பயனாய்  முதல்முறையாக இந்தியாவிற்கு பதக்கம் பெற்று தந்த சாய்னா நேவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டார்.
 
சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வரலாற்றில் 36 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் முதல்முறையாக இந்தியாவிற்கு பதக்கம் கிடைத்துள்ளது. இந்த கவுரவத்தை இந்தியாவிற்கு பெற்றுத் தந்த சாய்னா நேவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டர் மூலமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் வரலாற்று சாதனை படைத்து, பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் பெற்றுத் தந்த நட்சத்திர வீராங்கனை சாய்னாவின் வெற்றி தொடர வாழ்த்துக்கள் என மோடி சாய்னாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.