திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 25 ஆகஸ்ட் 2018 (06:49 IST)

அஜித்துக்கு வாழ்த்து கூறிய திமுக எம்.எல்.ஏ

தல அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஒரே ஒரு ஃபர்ஸ்ட்லுக், பல பிரேக்கிங் செய்திகளை பின்னுக்கு தள்ளிவிட்டு கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களின் டிரெண்ட்டாக இருந்து வருகிறது.
 
'விஸ்வாசம்' ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை கிட்டத்தட்ட பாராட்டாத கோலிவுட் திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம். கோலிவுட் நட்சத்திரங்கள் தங்கள் டுவிட்டர் பக்கங்களில் இந்த ஃபர்ஸ்ட்லுக் குறித்த டுவீட்டுக்களை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் திமுக பிரமுகர்களில் ஒருவரும் சென்னை சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெ.அன்பழகன் தனது டுவிட்டரில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘அஜித் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து. ‘விஸ்வாசம்’ பர்ஸ்ட் லுக் மிகவும் அழகாகவும் உற்சாகமாகவும் இருந்தது. அஜித்திற்கும் படக்குழுவிற்கும் வாழ்த்துக்கள் என தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு லைக்ஸ் மற்றும் ஷேர்கள் ஏராளமாக குவிந்து வருகிறது.