திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 மே 2018 (19:53 IST)

பேட்டிங், பவுலிங் என அசத்திய பாண்டியா; மும்பை அணி அசத்தல் வெற்றி!

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 
ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ர கொல்கத்தா பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது.
 
இதையடுத்து 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. இதன்மூலம் மும்பை அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
ஹர்திக் பாண்டியா பவுலிங் மட்டும் பேட்டிங் இரண்டிலும் அசத்தினார். 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சரியான நேரத்தில் தேவையான விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணி வெற்றிக்கு சிறப்பாக செயல்பட்டார்.