திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 6 மே 2018 (16:50 IST)

அதிரடியாய் வெடிக்க தொடங்கிய மும்பை அணி

ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய முதல் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.


ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா - மும்பை அணிகள் விலையாடி வருகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்தது. அதன்படி மும்பை அணி முதலில் களமிறங்கி விளையாடி வருகிறது. 
 
தொடக்க வீரர்களாக களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் மற்றும் லிவிஸ் அதிரடியாக விளையாடி வருகின்றனர். தற்போது வரை மும்பை அணி 9 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் குவித்துள்ளது.
 
இதுவரை 9 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் மும்பை அணி இனி போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.