மெஸ்ஸி எங்க சாமி.. ரொனால்டோ யாருன்னு காமி! – வேற லெவல் வெறியில் சேட்டன்கள்!
இன்று கத்தாரில் ஃபிஃபா உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கும் நிலையில் கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் செய்யும் செயல்கள் வைரலாகியுள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவிலேயே அதிகமான கால்பந்து ரசிகர்கள் உள்ள பகுதி கேரளா.
முக்கியமாக உலக ஜாம்பவான் வீரர்களான மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மார் போன்றவர்களுக்கு இங்கு பெரும் ரசிக பட்டாளமே உள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை கொண்டாட்டத்தில் கேரள மக்கள் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் ஆற்றின் அருகே பல அடி உயரத்திற்கு மெஸ்ஸி, ரொனால்டோவுக்கு கட் அவுட்களை வைத்திருந்தது வைரலானது.
தற்போது மேலும் சிலர் கால்பந்து போட்டிக்காகவே வீட்டை முழுவதும் பிரபல கால்பந்து அணியின் கொடிகள், வீரர்கள் படங்களால் அலங்கரித்து, கால்பந்து போட்டியை காண பெரிய திரையையும் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.
அதுமட்டுமா? பிரபல அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை சந்தித்து அர்ஜெண்டினா டீம் ஜெர்சியில் லவ் யூ கேரளா என்று எழுதி வாங்கியுள்ளனர். இந்த புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Edit By Prasanth.K