திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (17:43 IST)

திருமணத்துக்கு முன் வரை ’ஆண்கள் சிங்கம்’ தான் - தல தோனி ’ஓபன் டாக்’

முன்னாள் இந்தியா அணியின்  கேப்டன் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரருமான தோனி(38) நேற்று, திருமண தகவல் மையம் சார்பில் ஏற்பாடு செய்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 
அப்போது அவர் பேசியதாவது :
 
சாக்‌ஷிக்கும், எனக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அப்போது முதல் நான் அவருக்கு ஏற்ற கணவராக இருந்து வருகிறேன். அவர்தான் வீட்டில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறாள். அவர் மகிழ்ச்சியாக இருந்தால்தான் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
 
திருமணத்திற்கு முன் எல்லா ஆண்களும் சிங்கம் போன்று இருப்பார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு எல்லாம் மாறிவிடும். திருமணம் பந்தத்தின் அர்புதத்தை 50 வயது கடந்த பிறகுதான் உணர முடியும். எனக்கு 55 வயது ஆகும்போது, அதுதான் காதலின் உண்மையான வயது என சொல்லுவேன். அப்போதுதான் கணவன் மனைவி உறவு மேலும் வலுவடைகிறது என தெரிவித்தார்.
 
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அடுத்த வருடம் ஜனவர்இ வரும் எதையும் கேட்க வேண்டாம் அவர் கூறியதாகத் தகவல் வெளியாகிறது.