செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (11:42 IST)

முதல் மனைவி இருக்கும் போது இன்னொரு திருமணம்…. வரதட்சனைக் கொடுமை – இளம்பாடகர் மேல் அடுக்கடுக்காக புகார் !

சென்னையைச் சேர்ந்த கானா பாடகரான கானா தரணி மேல் அவரது இரண்டாவது மனைவி விஜயபானு என்பவர் அடுக்கடுக்காகப் புகார்களைக் கூறியுள்ளார்.

சென்னை கானாவின் அடையாளங்களுள் ஒருவராக திகழ்ந்தவர் பாடகர் கானா பழனி. அவரது மகனான தரணியும் கானா பாடல்கள் பாடுவதில் பிரபலமானவர். இயக்குனர் ரஞ்சித் உருவாக்கிய காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவில் சேர்ந்து பாடல்கள் பாடி வருகிறார். இது தவிர திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

வேகமாக வளர்ந்து வரும் இவர் மேல் விஜயபானு என்ற பெண் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அதிர்ச்சியளிக்கும் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஏற்கனவே நித்யா என்ற பெண்ணோடு திருமணம் ஆகி குழந்தை  இருப்பதை மறைத்து தரணி தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் எனவும் வரதட்சனையாக தங்கள் குடும்பத்திடம் 20 பவுன்களைப் பெற்றுக்கொண்டு மேலும் 30 பவுன் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புகாரை ஏற்ற போலிஸார் தரணியை கைது செய்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் சிறையில் அடைத்தனர்.