1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (17:19 IST)

அடப்பாவி... 23 வயசுல 8 கல்யாணமா? திக்குமுக்காடிய மனைவிகள்!!

23 வயதேயான இளைஞர் ஒருவர் 8 திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 
 
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை சேர்ந்தவர் சந்தோஷ். திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்த இவர் 5 மாதங்களுக்கு முன்பு, சத்யா என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்தார். 
 
அதன்பின்னர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு வேலைக்கு சென்ற சந்தோஷ் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த சத்யா, காணாமல்போன கணவரை கண்டுபிடித்து தரக்கோரி என திருப்பூர் போலீசாரிடம் புகாரளித்தார். 
 
கணவர் சந்தோஷின் செல்போன் அழைப்புகளை வைத்து அவர் சொந்த ஊரில் இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது சந்தோஷ், சசிகலா என்ற இளம்பெண்ணுடன் சந்தோஷ் குடித்தனம் நடத்திக் கொண்டிருப்பது அம்பலமானது. 
 
சந்தோஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மொத்தம் 8 இளம்பெண்களை ஏமாற்றி சந்தோஷ் தனித்தனியே திருமணம் செய்து குடித்தனமும் நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.