புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 27 நவம்பர் 2019 (13:15 IST)

டிக் டாக்கில் நடந்த வினோத திருமணம் – இணையத்தில் உலாவரும் வீடியோ !

காதல் ஜோடிகள் ஒன்று டிக்டாக் வீடியோ மூலம் திருமணம் செய்துகொண்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

சமீப காலமாக வாழ்க்கையில் நடக்கும் சுவாரசிய தருணங்களை அல்லது ஜாலியாக எதாவது சினிமா காட்சிகளை வீடியோவாக எடுத்து அதை டிக்டாக் போன்ற ஆப்களின் வழியே ஷேர் செய்வது அதிகமாகி வருகிறது. அதுபோன்ற ஒரு வீடியோ டிக்டாக் ஆப்பில் காலை முதல் வேகமாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில் கைலியோடு நிற்கும் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன், சுடிதாரில் நிற்கும் அதே வயதிருக்கும் பெண்ணுக்கு தாலி கட்டுகிறார். சுற்றி நிற்கும் இளைஞர்கள் அதை எந்த உணர்ச்சியுமற்று பார்க்க மாலை வருகிறது. ’பின்னணியில் ஜோடி நல்ல ஜோயியின்னு’ என்ற பாடல் ஓடிக்கொண்டு இருக்கிறது. நண்பர்கள் வாங்கிவரும் மாலையை இருவரும் மாற்றிக்கொள்ள அனைவரும் விசிலடித்து கொண்டாடுகின்றனர்.

இது உண்மையான கல்யாணம்தானா இல்லை டிக்டாக்குக்காக எடுக்கபபட்டதா என்பதும்  எங்கு யாரால் எடுக்கப்பட்டது என்பதுவும் தெரியவில்லை.