2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மேட்ச் பிக்சிங் ?

india 2011
sinoj| Last Modified வியாழன், 18 ஜூன் 2020 (22:31 IST)

கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் இலங்கை அணி மேட்ச் பிக்ஸிங் செய்து விலைபோய் விட்டதாக இலங்கையின் முன்னாள் அமைச்சர் ஒரு குற்றாச்சாட்டு பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இலங்கையின் முன்னாள் அமைச்சர் மஹிந்தனன அலுத்கமாகே கூறியுள்ளதாவது.

கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பையை விற்பனை செய்தததாக நான் சொல்கிறேன். நான் அப்போது அமைச்சராக இருந்தபோதும் இதைச் சொன்னேன். அப்போட்டி இலங்கையால் ஜெயிக்கப்பட வேண்டியது ஆனால் சமரசன் செய்யப்பட்டது.
இதுபற்றி ஆதாரம் இருந்தால் ஐசிசியிடம் புகார் அளிக்கலாம் என இலங்கை அணியின் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்த சங்ககாரா கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :