1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 ஆகஸ்ட் 2024 (09:28 IST)

அம்பானி இல்ல திருமண விழாவில் பிரியங்கா காந்தி ரகசியமாக பங்கேற்றாரா? பாஜக எம்பி தகவல்..!

Priyanka Gandhi
சமீபத்தில் நடந்த அம்பானி இல்ல திருமண விழாவில் பிரியங்கா காந்தி ரகசியமாக கலந்து கொண்டார் என்று பாஜக எம்பி நிஷாந்த் என்பவர் மக்களவையில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அம்பானியின் மகன் திருமணம் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் இதில் ஏராளமான அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், சர்வதேச பிரபலங்கள் கலந்து கொண்டனர் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று மக்களவையில் பேசிய பாஜக எம்பி நிஷாந்த் துபே, ‘அம்பானி இல்ல திருமண விழாவில் ரகசியமாக பிரியங்கா காந்தி  கலந்து கொண்டார் என்று தெரிவித்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் என்பவர் ’பிரியங்கா குறித்த தவறான தகவலை பாஜக எம்பி தெரிவித்துள்ளார். அம்பானி இல்ல திருமணம் நடந்தபோது பிரியங்கா காந்தி இந்தியாவிலேயே இல்லை, வெளிநாட்டில் இருந்தார். இது உள்துறை அமைச்சகத்திற்கு நன்றாக தெரிந்திருக்கும். நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவர் குறித்து அவையில் பொய்யான தகவல் பேசுவது உரிமை மீறல் என்று கூறினார்.

 உண்மையில் அம்பானி இல்ல திருமண விழாவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்பட அவருடைய குடும்பத்தினர் யாரும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva