சனி, 14 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (17:25 IST)

மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. பீகாரில் ஒரு அதிசய சம்பவம்..!

பீகார் மாநிலத்தில் தனது மனைவிக்கு ஒரு காதலன் இருக்கிறார் என்பதை தெரிய கொண்டு  அவருடைய காதலனுக்கே தனது மனைவியை திருமணம் செய்து வைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் ஆன ராஜேஷ் என்ற இளைஞர் தனது மனைவி அடிக்கடி காதலன் வீட்டுக்கு சென்று வந்ததையும் அவருடைய காதலனும் தன்னுடைய வீட்டிற்கு தான் இல்லாத நேரம் வந்து செல்வதையும் கவனித்துள்ளார்.

இதனை அடுத்து தனது மனைவியிடம் மனம் விட்டு பேசிய ராஜேஷ் இருவருக்கும் இடையில் ஆன காதல் புரிந்து கொண்டார். இதனை அடுத்து உடனே எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சேர்ந்து சந்தோஷமாக வாழுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த திருமணத்திற்கு தன்னுடைய பெற்றோர் இடமும் முழு சம்மதம் வாங்கி,  தனது மனைவியின் பெற்றோரிடமும் கூறி, ஊரை கூட்டி அவர்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.

ஏற்கனவே இவர்களுக்கு பிறந்த இரண்டு வயது மகனை தானே கவனித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளதாக தெரிகிறது. மனைவியின் நீண்ட நாள் காதலை மிகவும் தாமதமாக தெரிந்து கொண்டாலும் தன்னுடைய மனைவி சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர் விரும்பிய காதலனுடன் சேர்த்து வைத்துள்ள இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva