வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (14:26 IST)

காமன்வெல்த் போட்டியில் இருந்து கிரிக்கெட், ஹாக்கி, மல்யுத்தம் நீக்கம்! என்ன காரணம்?

common wealth
23-வது காமன்வெல்த் போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 2 வரை ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெறவுள்ளது. 2014-ஆம் ஆண்டு இங்கு கடைசியாக காமன்வெல்த் போட்டிகள் நடந்த நிலையில் இந்த முறை முக்கியமான போட்டிகளான ஹாக்கி, கிரிக்கெட், மல்யுத்தம், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் போன்றவை நீக்கப்பட்டுள்ளன. இது விளையாட்டு வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குறைந்த செலவில் போட்டிகளை நடத்துவதற்காக 10 முக்கிய போட்டிகளை மட்டும் இணைத்து, இதர போட்டிகளை நீக்கியது. இதில், டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரயத்லான், ரக்பி போன்றவையும் இடம் பெற்றுள்ளன. மேலும், போட்டிகள் 4 மைதானங்களில் மட்டுமே நடைபெறவுள்ளன.

இந்த முறை காமன்வெல்த் போட்டிகளில் தடகளம், நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிள் ஓட்டுதல், பளு தூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, 3x3 கூடைப்பந்து மற்றும் 3x3 சக்கர நாற்காலி கூடைப்பந்து போன்ற சில போட்டிகள் மட்டும் இடம்பெறவுள்ளன.

இந்தியாவுக்கு ஹாக்கி மற்றும் மல்யுத்தம் போன்ற விளையாட்டுகள் மிக முக்கியமானவை. இந்திய ஹாக்கி அணியினர் 2002 காமன்வெல்த் போட்டியில் 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்றிருந்தனர். மேலும், 2021 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணியினர் வெண்கலத்தை கைப்பற்றியதையும் நினைவில் கொள்ளலாம்.

இதேபோல், இந்திய வீரர்கள் மல்யுத்தம், பேட்மிண்டன், துப்பாக்கி சுடுதல் போன்ற போட்டிகளில் அதிகளவில் பதக்கங்களை வென்று வருவதால், இந்த விளையாட்டுகளின் நீக்கம் ரசிகர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.


Edited by Mahendran